உணர்ச்சிகள்
சென்னை வந்து இறங்கினேன்
சார்? எங்கே சார் போகணும்?
ஆட்டோ காரனின் குரல்
அமுதமாய் உணர்த்தியது
'தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்'
மின்சார தடை
ஒரு மணி நேரம்
தொலைக்காட்சியுடன் உரையாடல் நின்று !
மனிதர்களுக்குள் உரையாடல் தொடங்கியது
இருட்டில் !
முரண்பாடுகள்
அம்மா: மகன் வாங்கி தந்த புது washing machine
பற்றி பெருமை பேசிக்கொண்டிருந்தாள்
மகன்: காலரில் அழுக்கு அப்படியே இருக்க
கோபத்துடன் முறைத்தான்
தொலைக்காட்சி: 'கரை நல்லது' - விளம்பர இடைவேளை
விடுமுறை
வெகு நாட்களுக்கு பிறகு
ஊருக்கு சென்றேன்
தாய் கேட்டாள்
'அடுத்த விடுமுறை எப்போது'
- ராம்குமார்
Friday, November 6, 2009
Sunday, October 25, 2009
The Great Mathematician
Wednesday, October 14, 2009
தீபாவளி நல்வாழ்துகள்
விளம்பர இடைவேளை
அழகாக சிணுங்குகிறாள்
ஸ்னேகா
'போலாமா' என்று
தீபாவளி நெருங்கியதை
உணர்ந்தேன்!
தீபாவளி நல்வாழ்துகள்
Monday, September 14, 2009
The Swap
Wednesday, September 9, 2009
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் வரும் மன்னிக்கவும் வந்த சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' தொடரின் விசிரியக இருந்தவன் நான். அதை ஒரு தொடர் என்று சொல்வது சரிய என்று தெரியவில்லை. ஏன் என்றாள் 'கற்றதும் பெற்றதும்' ஒரு ப்ளோக் போல் செயல்பட்டு வந்தது என்றே சொல்ல வேண்டும். அங்கே சுஜாதா என்னும் கலைஞன் தன் வாழ்வின் சுவடுகளை மிக அழகாக பதிவு செய்து உள்ளான். அங்கே சூரியா ஜொவின் திருமணம் முதல் நம் ஆழ்வாரின் பாடல்கள் வரை அனைத்தும் பதி விட பட்டுள்ளது.
திடீர் என நான் ஏன் சுஜாதா பற்றி பேச வேண்டும். காரணம், சுஜாதா கற்றதும் பெற்றதும் தொடரில் கேட்ட கேள்வி பதில்கள், அதன் பக்கங்கள் என பத்திர படுத்தி வைத்து இருந்த என் பழைய டைரி தற்செயலாக கைக்கு கிடைத்தது. அதில் இருந்து சில துளிகள்...
கேள்வி: 55 வார்த்தைகளில் கதை எழுத வேண்டும்(குறிப்பு: தலைப்பும் கதையும் உங்கள் கற்பனைக்கே)?
பதில்:
தலைப்பு - புகழ்
கதை - உலகின் மிகவும் பிரபலமானவர்க்குண்டான பிரச்சனைகள் எனக்கு அத்துப்படி. தினமும் ஆட்டோகிராப் வாங்க வரும் கூட்டத்திற்கு அளவில்லை. எனக்கு ரசிகர்கள் இல்லாத இடமே கிடையாதெனலாம். வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். எதற்குமே முகம் சுலிக்காமல் அனைவரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய கற்றுக்கொடுத்தார்கள்.
இருப்பினும் புகழ்போதை உச்சியிலேறி நான் யார் தெரியுமாவென மமதையுடன் கேட்டதேயில்லை.
அன்றும் வழக்கம்போல பணிமுடிந்து இல்லம் திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. டிஸ்னிலேண்ட் உடைமாற்றும் இடத்தில் எனது மிக்கிமவுஸ் சீருடை சிரித்துக்கொண்டிருந்தது...
விகடன் பிரசுரம் இந்த பதிவுகளை 'கற்றதும் பெற்றதும்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளது முடிந்தால் படித்து பாருங்கள்....

Subscribe to:
Posts (Atom)